Thursday, January 4, 2018

நிரம்பக் காத்திருக்கும் மதுப்புட்டிகள்

விடுமுறையில்
காதலியை ரயிலேற்றிவிடும்
மெல்லிய கணத்தோடு
குடித்து முடித்த மதுப்புட்டிகளை
என் வீட்டின் வெளியே வைக்கிறேன்.
ஒரு கொண்டாட்டம்,
சில இரத்தச் சிதறல்,
சில கவிதைகள், முதல் சோரம்,
சில கண்ணீர்த்துளிகள்,
ஒரு கொலை, காமத்தெறிப்பு,
முதல் முத்தம், ஒரு துரோகம்
என
எதோ ஒன்றினால்
மீள் நிரப்புச் செய்யப்படும்
அவை,
விற்பனை அடுக்குகளில் காத்திருக்கக்கூடும்,
எனக்காகவும்
உங்களுக்காகவும்.




எழுதிய நாள்: 28-செப்டம்பர்-2016

No comments:

Post a Comment