Sunday, August 25, 2013

அரித்தெடுக்கவியலா
ஆழத்துள் கிடக்கின்றன
பால்யத்தின் திடலில்
கழற்றியெறிந்த
அரைக்கால் சட்டையும்
வெயில் தின்ற
விளையாட்டுகளும்.
ஏக்கப் புற்றுள்ளிருந்து
ஊர்ந்தேறும்
எறும்புச்சாரையைக்
கயிறாக்கி
ஊஞ்சல் ஆடுகிறான்
இவன்.