Tuesday, December 29, 2009

மனிதம்

சாலை கடந்த நாயை
அடித்து எறிந்து க‌டந்தது
வாக‌ன‌த்தில் மிருக‌ம்,
செத்து விழுந்த‌து
ம‌னித‌ம்.

Thursday, December 24, 2009

ஜன்னல் காற்று

எப்போதாவது கிடைக்கும்
ஜன்னலோரப் பயணத்தில்
காத்திருக்கும் காகிதங்களிடமிருந்து
என் கவிதைகளை
எப்போதும் போல்
பிடுங்கிச் சென்றுவிடுகின்றது
ஜன்னலுக்கு வெளியே
நகர்ந்து செல்லும்
காற்றுலகம்.

Tuesday, December 22, 2009

ஒளி விலகல்

பாதையோர அனுமனைக்
குவியும் பார்வை
பிச்சைத் துண்டின்
சில்லறையாய்
சிதறிக் கிடந்தலையும்
குட்டைப் பாவாடை
விசிறிச் சென்ற
சிறு காற்றில்.

Wednesday, December 16, 2009

பேனா மயக்கம்

தூளிக் குழந்தை
இமை மூட‌
கூடமெங்கும்
மனைவியின் தாலாட்டு வரிகள்,
கவிஞனின் கையில்
வெற்றுக் காகிதம்.

தொடக்கப்புள்ளி



அடம் செய்யும்
குழந்தையை நோக்கிய
முதல் மிரட்டல்,
வன்முறையின்
முதல் துளி.