
கிடக்கின்றன நாட்கள்;
தினம் தினம் பாடல்கள்..
செவி கடந்தும்,
மனம் பிடித்தும்,
புதியன,
பழையன,
பழையனவாய்த் தோன்றும்
புதியன,
தேநீர்க் கடைகளில்,
வைபவக் கலகலப்பில்...
தினம் தினம் பாடல்கள்.
இசைக்காய் சிலவும்
இசைக்காய் சிலவும்
வரிகளுக்காய் சிலவும்
மனம் படியும் பாடல்கள்.
எத்தனை இருந்தும்
நினைத்த கணம்-இதழ்
நனைக்கும் புன்னகை தருவது
இசையும் ராகமும்
புரியாத வயதில்
மனம் படிந்த
அந்தப் பாடல் தான்.