Thursday, January 4, 2018

நீ என் தீ…

நான் வைத்த தீயில்
மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கிறேன்.
பற்றியெரியும் தீயின் நாக்குகளை
சுடுகாட்டின் வெட்டியானைப்போல்
சோதித்துச் செம்மைப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
ஈரக்கால்களால் என் மீது படரும்
உன் சிரிப்பினைப் போலவே
நெருப்பின் விரல்கள்
என் மீது ஆடிக்கொண்டிருக்கின்றன.
நின்று எரியும் நெருப்புக்குள்
ஆா்ப்பாட்டமில்லாது
சாம்பலாய் உருமாறிக்கொண்டிருக்கிறது
உன்னிலிருந்து விலகிய நான்.
புறக்கணிப்பின் கசையடி
மற்றொரு முறை விழாதிருக்க
உன் திசையில் பறக்காதிருக்கட்டும்
இந்தச் சாம்பல்.



எழுதிய நாள்: 11-ஜூலை-2016

No comments:

Post a Comment