Thursday, January 4, 2018

அவன் (எ) அவன்

எல்லோராலும் அறியப்படும் பெயராலேயே
நானும் அவனை அறிந்திருந்தேன்.

சிலரின் "டேய் தம்பி"க்கும்
என்னுடைய  வா...ராஜா வுக்கும்
ஒரே பாவனை முகம் தான் காட்டுவான்

அவ்வப்போது "லெஃப்டு" எனவும்,
சில சமயம்
அவன் உருவத்தோடு சோ்ந்த
கெட்ட வார்த்தையாலும்
பிரியத்தோடு விளிக்கப்படக் கேட்டிருக்கிறேன்.

அவனுக்கு
குலசாமியின் பெயரொன்றும் இருந்தது
எனக்குத் தெரியாது
அவன் புகைப்படம் அச்சிட்ட
கண்ணீா் அஞ்சலி
போஸ்டரைப் பார்க்கும் வரை.


எழுதிய நாள்: 30-ஜூன்-2016

No comments:

Post a Comment