அந்த இரண்டு நாட்களுக்கிடையில்
மழையைத்தவிர
வேறொன்றும் இல்லை
மழையின்
றெக்கைக்குள்ளிருந்து
வந்து விழுந்ததுதான் அந்த நாள்
மழையெழுப்பிய
சிறுகுன்றுகள் மீது
ஏறவியலாது
விழுந்தன
பேசியிருக்க
வேண்டிய வார்த்தைகள்
அந்த நாளின் மீது படர்ந்த
ஒரு விதை
மழையின்
பச்சை குடித்து
வேர்களில்
வெம்மை கொண்டது
மற்றொரு
மழை வந்து தூக்கிப் போகும்
வரை
நேற்றும்
ஆகாமல் நாளையும் ஆகாமல்
அது
அங்கேயே
கிடக்கும் அந்த நாளாகவே
அந்த நாளின் மீது இடறும்
கால்களில்
ஒட்டிக்கொள்ளக்கூடும்
அதனுள்
கிடக்கும்
தரப்படாத
முத்தமும்
முளைத்துக்கொண்டிருந்த
ஒரு கத்தியின் கூர்முனையும்.
எழுதிய நாள் :
20-ஜூன்-2017
No comments:
Post a Comment