அவன் கவிஞன், வசீகரன்,
நண்பன்,
ஓவியங்களில் பெருவிருப்பம்,
பேச்சால்
மயக்குபவன்,
போதையின்
உச்சத்தில்
தெரு நாய்களுடன் அமர்ந்து அழுதவன்,
கையில்
குழலில்லாத
கிருஷ்ணன்
சிலையிடமிருந்து விலகாது நின்றவன்,
வெள்ளைப்பல்
கறுப்பழகியின் சிரிப்பை
இன்றுவரை
சுமந்து திரிபவன்,
நெற்றியின்
ஒற்றை முத்தத்தில்
நெருப்பைக்
கண்ணீராக்கியவன்,
பிரகாரத்தில்
கண்டவளின் உடலுடன்
சுயபோகம்
கொண்டவன்,
சில கண்ணீர்த்துளிகளையும் சிரிப்பினையும்
வரும் நாளைக்காய் சேர்த்து வைத்திருப்பவன்,
ஒருவரையும்
இவ்விதம்
நினைவில்
கொள்ளத்தேவையில்லை
அவரவர்
பெயர்களால்
அவர்களைக்
கொலை செய்வோம்.
எழுதிய நாள் :
15-மே-2017
No comments:
Post a Comment