Showing posts with label இரயில் (சக)வாசம். Show all posts
Showing posts with label இரயில் (சக)வாசம். Show all posts

Tuesday, December 19, 2017

வெளியில் திரியும் உரையாடல்

பயணித்த
நூற்றைம்பது மைல் தூரத்தில்
சிறுவார்த்தையும் பேசாமல்
இறங்கிப்போய் விட்டாள்
அந்தத் தெற்றுப்பல்காரி
அவளுக்கும் எனக்குமிடையே
நிகழ்ந்திருக்க வேண்டிய உரையாடல்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அவளிருந்த இருக்கையில்
மென்னகையுடன்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்
நானும்
ஜன்னல் வழி
குதித்து விளையாடும் வெயிலும்.



எழுதியது : 6-ஏப்ரல்-2016
[ஒளிப்படம் : ஜெயேந்திரராஜன்]

Tuesday, April 27, 2010

விலகாவரம்

தனியே இரயில் பயணம்;
மேலடுக்குப் படுக்கையில்
காற்றுக்குமிழிகளுடன்
பக்கத்தில் படுத்திருந்தது
அவள் நிரப்பித் தந்த
போத்தல் நீர்.

திரை

எதிரடுக்கில்
மல்லிகை மணத்துடன்
படுத்திருந்தவளின
விலகிய போர்வை காட்டியது
மெட்டி விரல்கள்.

இரயில் (சக)வாசம்

இரயில் பயணங்களில் கண்ணில் விழுந்த காட்சிகளைக் கோர்த்ததில் விளைந்த வார்த்தைகள் இங்கே இரயில் (சக)வாசத்தில்...