என் ஆத்ம நண்பர்களே
யாரும்
யூதாஸாய் மாறி
என் கன்னத்தில் முத்தமிட வேண்டாம்
என் கோப்பையில்
ஹெம்லாக்கை
புன்னகையுடன் பரிமாறவேண்டாம்
கற்பனை
மீறிய ஆயுதங்களோ
இயல்புக்கு
மீறிய தந்திரங்களோ தேவையில்லை.
வந்தமர்ந்து
என் தோள்களில்
கைபோட்டு
அணைத்துக் கொள்ளுங்கள்
அற்புதமான
உங்கள் புன்னகையை
என் அறை முழுக்கப் பரவவிடுங்கள்
நான் மெல்ல உங்கள் தோள்களில்
சாயும்போது
சிகரெட்
சாம்பலைத் தட்டிவிடுவது போல்
உறங்கிக்
கொண்டிருக்கும் தொட்டில் குழந்தையை
கிள்ளி
விடுவது போல்
எனக்குள்
இருக்கும் குற்ற உணர்ச்சியின் திரியை
மெல்லக்
கிள்ளி விடுங்கள்
அது ஒன்றே போதும்
என்னை இயல்பாகக் கொல்வதற்கு.
எழுதிய நாள் :
29-ஜூன்-2017
No comments:
Post a Comment