நந்தினியோ ராஜலெட்சுமியோ
பெயரில் என்ன இருக்கிறது
எல்லாரும் தேவடியாக்கள்
தானே உனக்கு
தலையைத் தனியே அறுத்து எடுக்கும்
வரை
நிமிர்ந்தேதான் இருந்ததா
உன் குறி?
வீட்டுக்கு விலக்காகி அமர்ந்திருந்த
உன் சகோதரியிடமா?
சமைத்துக்கொண்டிருந்த உன்
தாயிடமா?
அறுத்த தலையை
யாரிடம் முதலில் காட்டினாய்?
தலையிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த
ரத்தத்தில்
தன் தூமையின் மணம்
இருந்ததாகச் சொன்னாளா உன்
தாய்?
சேரிக்குப்பூட்டிய உன் கோயிலில்
வைத்தாயா?
எட்டி உதைப்பதற்கும்
ஏறிப் புணா்வதற்கு மட்டும்
தீட்டில்லையோ உனக்கு?
இத்தனை
எரித்தாய் சிதைத்தாய் அறுத்தாய்
நிறைந்துவிட்டதா உன் தாழி?
இன்னும்
எத்தனை சவக்குழிகளைத் தோண்டுவதற்குத்
தயாராய் இருக்கிறது
உன் குறி?
No comments:
Post a Comment