அவன் இறந்துவிட்டான்
அவனுக்கு ஒரு பெயா் இருந்தது
அவனுக்கென ஒரு மணம் இருந்தது
அவனுக்கென சில அடையாளங்கள்
இருந்தன
இப்போது எல்லாம் வேறாக.
நிறையப் பகிர்ந்தவன் அவன்
சிரிப்பு கண்ணீா் ரத்தம்
வியா்வை எச்சில் முத்தம்.
அவனுக்கென தோழா்கள் தோழிகள்
காதலிகள்
யாருக்கு அறிவிப்பது இவன்
மரணத்தை?
எவருடைய கண்ணீா் வேண்டும்
இந்த உடலுக்கு?
அவன் இல்லை இப்போது.
No comments:
Post a Comment