படுக்கையறையின் நிசப்தம்
நிறைந்த
பின்னிரவின் ஒரு நேரத்தில்
நிமிடத்திற்கிரு குறுஞ்செய்திகளால்
முத்திக்கொண்டோம்
கடைசியாய் ஒளிர்ந்த திரை
உன்பெயருடன் சொன்னது
”இதோ வந்துடறேன்”
காத்திருந்தேன் காத்திருந்தேன்
கா………….த்திருந்தேன்
உறக்கத்தின் வீதிக்குள்
புகுந்த நீ
என்னை வாசலில் நிறுத்திவிட்டாய்.
அந்த வேளையில் கூா்க்காவைப்
போல்
சுற்றிக்கொண்டிருந்த தேவதைகளை
நோக்கிக் கத்தினேன்
”நானும் எவ்வளோ நேரம்தான்
தூக்கம் வராத மாதிரியே….”
எழுதியது 2012ம் ஆண்டில் ஒரு நாள்
No comments:
Post a Comment